1488முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம்
புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்-
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக் குயில் கூவும்
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய-நறையூரே             (2)