1498 | கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால் எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை-அடிக்கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (2) |
|