1500 | பைங் கண் ஆள்-அரி உரு ஆய் வெருவ நோக்கி பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (4) |
|