1501 | அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (5) |
|