1502 | தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய் தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய் தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய் தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர் மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6) |
|