1503 | முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர் மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன் சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (7) |
|