1507ஆளும் பணியும் அடியேனைக்
      கொண்டான் விண்ட நிசாசரரைத்
தோளும் தலையும் துணிவு எய்தச்
      சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்-
வேளும் சேயும் அனையாரும்
      வேல்-கணாரும் பயில் வீதி
நாளும் விழவின் ஒலி ஓவா
      நறையூர் நின்ற நம்பியே             (1)