151வெண்ணெய் அளைந்த குணுங்கும்
      விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ் இரா உன்னைத்
      தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு
      எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே
      நாரணா நீராட வாராய்             (1)