1510ஒளியா வெண்ணெய் உண்டான் என்று
      உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
      விம்மி அழுதான்-மென் மலர்மேல்
களியா வண்டு கள் உண்ண
      காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
      நறையூர் நின்ற நம்பியே             (4)