1511வில் ஆர் விழவில் வட மதுரை
      விரும்பி விரும்பா மல் அடர்த்து
கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்
      காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்-
சொல் ஆர் சுருதி முறை ஓதிச்
      சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
      நறையூர் நின்ற நம்பியே             (5)