1515ஆறும் பிறையும் அரவமும்
      அடம்பும் சடைமேல் அணிந்து உடலம்
நீறும் பூசி ஏறு ஊரும்
      இறையோன் சென்று குறை இரப்ப
மாறு ஒன்று இல்லா வாச நீர்
      வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்-
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய
      நறையூர் நின்ற நம்பியே             (9)