1516நன்மை உடைய மறையோர் வாழ்
      நறையூர் நின்ற நம்பியைக்
கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்
      கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை
பன்னி உலகில் பாடுவார்
      பாடு சாரா பழ வினைகள்
மன்னி உலகம் ஆண்டு போய்
      வானோர் வணங்க வாழ்வாரே             (10)