152கன்றுகள் ஓடச் செவியிற்
      கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய்
      திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்
      நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும்
      எம்பிரான் ஓடாதே வாராய்             (2)