1521கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கைக் கார் அரக்கன்
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த
வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை நாடி நறையூரில் கண்டேனே             (5)