1522உம்பர்-உலகோடு உயிர் எல்லாம் உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை
அம்பு அன்ன கண்ணாள் அசோதை-தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே             (6)