1524மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின்மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை
நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே             (8)