1525பொங்கு ஏறு நீள் சோதிப் பொன் ஆழி-தன்னோடும்
சங்கு ஏறு கோலத் தடக் கைப் பெருமானை
கொங்கு ஏறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே             (9)