153பேய்ச்சி முலை உண்ணக் கண்டு
      பின்னையும் நில்லாது என்நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி
      அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி
      கடாரத்திற் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணிவண்ணா
      மஞ்சனம் ஆட நீ வாராய்             (3)