1537கிடந்த நம்பி குடந்தை மேவி கேழல் ஆய் உலகை
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக்
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (1)