1540கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன்
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு
நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (4)