1545பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம்-
நங்கள் வினைகள் தவிர உரைமின்-நமோ நாராயணமே             (9)