1547கறவா மட நாகு தன் கன்று உள்ளினால்போல்
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்-
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி
பிறவாமை எனைப் பணி-எந்தை பிரானே             (1)