1566நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக்
கல் நீர மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர்-கோன்
சொல் நீர சொல்-மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில்
நல் நீர்மையால் மகிழ்ந்து நெடுங் காலம் வாழ்வாரே             (10)