1573 | பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே (7) |
|