1588பாரித்து எழுந்த படை மன்னர்-தம்மை மாள பாரதத்து
தேரில் பாகன் ஆய் ஊர்ந்த தேவ-தேவன் ஊர்போலும்-
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே            (2)