1598சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த
சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை
செங் கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அம் கமலக் கண்ணனை-அடியேன் கண்டுகொண்டேனே             (1)