1599கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக் கொண்டருளும்
மூவா வானவனை முழு நீர் வண்ணனை அடியார்க்கு
ஆஆ என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதிதேவனை-யான் கண்டுகொண்டு திளைத்தேனே             (2)