1603பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரி யானை உகந்தான்-அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும்
கரியானை-அடியேன் கண்டுகொண்டு களித்தேனே             (6)