1609 | பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி பாவை பூ-மகள்-தன்னொடும் உடனே வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்- அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (2) |
|