1610 | நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் அடியேனைச் செய்யாத உலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்- அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (3) |
|