1617 | அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக் கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன் சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை தூய மாலை இவை-பத்தும் வல்லார் மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே (10) |
|