1619 | முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்- செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் -அவை முரல செங் கமல மலரை ஏறி அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (2) |
|