1620 | குலத் தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்- மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (3) |
|