| 1622 | சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்- இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல் அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (5) |
|