1625 | கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்- செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (8) |
|