1638பெரும் புறக் கடலை அடல் ஏற்றினை
      பெண்ணை ஆணை எண் இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை
      பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை
அரும்பினை அலரை அடியேன் மனத்து
      ஆசையை அமுதம் பொதி இன் சுவைக்
கரும்பினை கனியை-சென்று நாடி
      -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே             (1)