1639மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்
      மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை
மைந் நிறக் கடலை கடல் வண்ணனை
      மாலை ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை
நென்னலை பகலை இற்றை நாளினை
      நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை
கன்னலை கரும்பினிடைத் தேறலை-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே             (2)