1641 | பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை காசினை மணியை-சென்று நாடி- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (4) |
|