1642 | ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினை புனலை-சென்று நாடி- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (5) |
|