1645 | வெம் சினக் களிற்றை விளங்காய் விழக் கன்று வீசிய ஈசனை பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (8) |
|