1646பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை
      பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை
      வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை
      மாலை மா மதியை மறையோர்-தங்கள்
      கண்ணினை-கண்கள் ஆரளவும் நின்று-
      கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே             (9)