1649செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது?
      என்கின்றாளால்
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை
      என்கின்றாளால்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா
      என்கின்றாளால்-
கரு வரைபோல் நின்றானை கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?            (2)