165கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்
      ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்            (5)