1650துன்னு மா மணி முடிமேல் துழாய் அலங்கல் தோன்றுமால்
      என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும்
      என்கின்றாளால்
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால்
      என்கின்றாளால்-
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ? (3)