1655கொற்றப் புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான்
      என்கின்றாளால்
வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால்
      என்கின்றாளால்
பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ?
      என்கின்றாளால்-
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ? (8)