1656வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்
      என்கின்றாளால்
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன்
      என்கின்றாளால்
பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே
      பயில்கின்றாளால்-
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக்
      கண்டாள்கொலோ?            (9)