1657மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக்
      கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
      கலியன் சொன்ன
பா வளரும் தமிழ்-மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்
      ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
      புகழ் தக்கோரே (10)