1663வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம்
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என்-கண் துயில் இன்று இவர் கொள்ளவே? (6)