1665தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா
கண்டு தான் கண்ணபுரம் தொழப் போயினாள்
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே?             (8)