169மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த
முன் இவ் உலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூ அணைமேல் வைத்துப்
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்
      பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்            (9)